வாய்ப்பைத் தேட வேண்டும்
அரசு கொள்முதல் என்பது யாருக்கும் தானாக வந்து சேரும் வாய்ப்பு அல்ல. தொழில்முனைவோர் தங்கள் தொழிலுக்குப் பொருத்தமான கொள்முதல் வாய்ப்புகளைத் தேட வேண்டும். தேவையான பதிவுகளைச் செய்ய வேண்டும். விதிமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒப்பந்த நிபந்தனைகளைப் படித்த பிறகே பங்கேற்க வேண்டும். தொழில் தொடங்கியவுடன் “வாடிக்கையாளர்கள் எங்கே?” என்று தேடுவதைவிட, “எந்தெந்த சந்தைகளில் எனது பொருளுக்கான தேவை இருக்கிறது?” என்று தேடுவது பயனுள்ளதாக இருக்கும். அரசு உதவி என்பது பணம் அல்லது மானியம் மட்டுமல்ல. ஒரு தொழிலுக்குச் சந்தை வாய்ப்பை உருவாக்குவதும் மிகப்பெரிய ஆதரவுதான். தொழில்முனைவோர் இதுவரை தன்னைத் தேடி வரும் வாடிக்கையாளரை எதிர்பார்த்திருந்தால், இனிமேல் வாடிக்கையாளரைத் தேடும் தொழில்முனைவோராக மாற வேண்டிய நேரம் இது.