உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / லுாப்ரிசால் பாலிஹோஸ் முதலீடு

லுாப்ரிசால் பாலிஹோஸ் முதலீடு

சென்னை:மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர குழாய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை லுாப்ரிசால், பாலிஹோஸ் நிறுவனங்கள் தமிழகத்தில் அமைக்க உள்ளன. இதற்காக, 200 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், அந்நிறுவனங்கள் மற்றும் தமிழக தொழில் துறை அதிகாரிகள் இடையில் நேற்று கையெழுத்தானது.இந்நிகழ்ச்சியில், தொழில்துறை செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலை, சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !