உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு மகாரத்னா அந்தஸ்து

எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு மகாரத்னா அந்தஸ்து

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், மத்திய அரசின் 14வது 'மகாரத்னா' பொதுத்துறை நிறுவனமாக அந்தஸ்து பெற்றுள்ளது. முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கான ஒப்புதல் அளித்திருந்தார். எச்.ஏ.எல்., என்பது பாதுகாப்பு உற்பத்தி துறைக்கான மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தை மகாரத்னா நிறுவனமாக தரம் உயர்த்துவதற்கான முன்மொழிவை, நிதிச் செயலர் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவும், மத்திய அமைச்சரவை செயலர் தலைமையிலான உயர்நிலைக் குழுவும் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளித்த நிலையில், மகாரத்னா அந்தஸ்து பெற்ற 14வது நிறுவனமானதாக, பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சகம் தன் எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை