மேலும் செய்திகள்
3 மாத உச்சத்தில் சேவைகள் துறை
07-Oct-2026
புதுடில்லி: புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி குறைவின் காரணமாக, நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த அக்டோபர் மாதத்தில் சற்று சரிவு கண்டுள்ளதாக, ஹெச்.எஸ்.பி.சி., வங்கியின் மாதாந்திர பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தயாரிப்பு துறை வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு கடந்த செப்டம்பரில் 55.1 ஆக இருந்த நிலையில், அது அக்டோபரில் 54.7 ஆக குறைந்துள்ளது. இந்த குறியீடு 50க்கு மேல் இருந்தால் உற்பத்தி துறை வளர்ச்சி பாதையில் இருப்பதாகவும், 50க்கு கீழ் இருந்தால் சரிவைக் குறிப்பதாகவும் பொருள். அந்த வகையில், அக்டோபரில் குறியீடு சரிந்தாலும், தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இந்திய உற்பத்தி துறை நீடிக்கிறது. மேலும், அதன் நீண்டகால சராசரியைவிடவும் குறியீடு அதிகமாக உள்ளது.
07-Oct-2026