உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கடல்சார் ஸ்டார்ட் அப்களுக்கு உதவ துாத்துக்குடியில் மையம்  கடல்சார், விண்வெளி ஸ்டார்ட் அப்

கடல்சார் ஸ்டார்ட் அப்களுக்கு உதவ துாத்துக்குடியில் மையம்  கடல்சார், விண்வெளி ஸ்டார்ட் அப்

சென்னை:கடல்சார், விண்வெளி துறையை சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவ, துாத்துக்குடியில் வட் டார புத்தொழில் மையத்தை தமிழக அரசின், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் அமைக்கிறது. தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் செய்கிறது. விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த, துாத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைத்து வருகிறது. அதன் அருகில் ராக்கெட், செயற்கைக்கோள் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொழில் துவங்க வசதியாக, விண்வெளி தொழில் பூங்காவை தமிழக அரசு அமைக்கிறது. எனவே, விண்வெளி மற்றும் கடல்சார் துறையை சேர்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ, துாத்துக்குடி மாவட்டம், துாத்துக்குடி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணி இம்மாத்திற்குள் துவங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை