உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மாருதி சுசூகி 51,000 வாகனங்கள் விற்பனை

மாருதி சுசூகி 51,000 வாகனங்கள் விற்பனை

புதுடில்லி:வடமாநிலங்களில் தீபாவளிக்கு முன் கொண்டாடப்படும் தந்தேரஸ் விழாவின்போது இதுவரை இல்லாத வகையில், 51,000 வாகனங்கள் விற்பனையாகி உள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள், புதிய பொருட்கள் வாங்குவதற்கு நல்ல நாளாக வடமாநிலங்களில் தந்தேரஸ் கொண்டாடப்பட்டது. இதில் 41,500 பயணியர் வாகனங்கள் விற்கப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை 10,000 பேர் தங்கள் வாகனத்தை டெலிவரி பெறுவதாக கூறியிருப்பதாகவும் மாருதி சுசூகி நிறுவன சந்தை பிரிவு மூத்த அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ