உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / செய்தி துளிகள்

செய்தி துளிகள்

கேம் தயாரிப்புக்கு நிதியுதவி

வீடியோ கேம் தயாரிக்கும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க, ‘கிராப்டன்’ நிறுவனம் தனித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி, தொழில்நுட்ப ஆலோசனை, கேம்களை சந்தைப்படுத்துவதற்கான உதவி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சமீபத்தில், 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து எட்டு நிறுவனங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்ட விண்ணப்ப அறிவிப்பை இணையதளத்தில் அறியலாம். விபரங்களுக்கு: krafton.in/kigi

தனித்திறன் வாயிலாக வருமானம்

கல்வி, இசை, ஓவியம், புகைப்படம் உள்ளிட்ட துறைகளில் திறமை கொண்டோர், ‘டேக்மாங்கோ’ இணையதளம் வாயிலாக கட்டண பயிற்சி வகுப்புகளை நடத்தி சம்பாதிக்கலாம். பயிற்சி வகுப்புகளை பதிவு செய்து விற்பது, நேரலை வகுப்புகள் நடத்துவது, தனிப்பட்ட ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கடந்த நிதியாண்டில், இத்தளத்தை பயன்படுத்திய 7,000க்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் ஒட்டுமொத்த வருவாய், 500 கோடி ரூபாயை கடந்துள்ளது. விபரங்களுக்கு: tagmango.com

இசை படைப்புகளுக்கு புதிய சந்தை

புதிய இசைப் படைப்புகளுக்காக, நடப்பு நிதியாண்டில் 300 முதல் 350 கோடி ரூபாய் வரை செலவிட, ‘சரிகமா’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆண்டுதோறும் 4,500 முதல் 5,000 இசைப் படைப்புகளை வெளியிட்டு வருகிறது. திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனிப்பாடல்களை வெளியிடுவதிலும் கவனம் செலுத்துகிறது. இதனால், சுயாதீன இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் சிறிய இசை தயாரிப்பு நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை