தொடர்ந்து குறையுது பால் உற்பத்தி வெண்மை பு।ரட்சியில் வீழ்ச்।சி
புதுடில்லி:வெண்மைப் புரட்சிக்கு பெயர் பெற்ற நம் நாட்டில், 2020-21ல் 5.81 சதவீதமாக இருந்த பால் உற்பத்தி வளர்ச்சி, தற்போது 3.78 சதவீதமாக சரிந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி மையமான இந்தியாவில், கடந்த ஆண்டு ஜூன் - ஜூலையில் பெரும்பாலான மாநில அரசுகள், பால் விலையை லிட்டருக்கு 1 முதல் 2 ரூபாய் அதிகரித்தன. முந்தைய கோடைக்கால மாதங்களில் பால் உற்பத்தி குறைந்ததால், அது பால் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பு
ஆனால், பால் உற்பத்தியில் தொடர்ந்து வளர்ச்சியை அதிகரித்து வந்த நம்நாடு, அண்மை ஆண்டுகளாக வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துவங்கியது. பால் தேவை குறைந்தபோது, பால் கொள்முதலை குறைத்த பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், இழப்பை ஈடுகட்ட, கால்நடை வளர்ப்போருக்கு கொள்முதல் விலையைக் குறைத்தன. அதன் தொடர்ச்சியாக, தீவன செலவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயிகள் புதிய மாடுகளை வாங்குவதைத் தவிர்த்தனர். தீவன அளவு குறைந்ததால், பால் உற்பத்தியும் குறையத் துவங்கியது. உயரும் தீவன விலை
கால்நடைத் தீவனங்கள் விலையும் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. உலக அளவில், ஒரு மாடு தரும் பாலின் தினசரி சராசரி 40 லிட்டர் என்றால், இந்தியாவில் அது 10 லிட்டர் மட்டுமே. ஆனால், பால் தேவை ஆண்டுக்கு 5 முதல் 6 சதவீதம் உயரும் நிலையில், உற்பத்தி 3.78 சதவீதம் குறைவதால், பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட, விஞ்ஞான வழியில் பால் உற்பத்தித் திறனை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். உற்பத்திச் செலவை குறைப்பதன் வாயிலாக, விவசாயிக்கு உரிய விலை கிடைப்பதும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பால் கிடைப்பதும் சாத்தியமாகும் என, அமுல் நிறுவன பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். கட்டமைப்பு தவறு
பால் பண்ணை கட்டமைப்புக்கு 15,000 கோடி ரூபாயை நிதியை, மத்திய கால்நடை பராமரிப்புத் துறை ஏற்படுத்தியது. கூட்டுறவு அமைப்புகள் 500 கோடி ரூபாய் வரை கடன் பெற்று, பால் குளிரூட்டும் மையம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கட்டடம் கட்டுவதால் மட்டும் கிராமங்களில் பால் உற்பத்தியை அதிகரித்து விட முடியாது என்றும், கடந்த 7, 8 ஆண்டுகளில் கிராமங் களில் இதற்காக செய்யப் பட்ட முதலீட்டால், பால் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்றும் இத்துறை நிபுணர் ஜா தெரிவித்தார். விலை கிடைப்பதில்லை
பால் உற்பத்தியின் முக்கிய பங்குதாரர் விவசாயி. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், பால் உற்பத்தி குறையும்போது, தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை அதிகரிக்கின்றன. அதனால், பாடுபட்டு பால் உற்பத்தியை விவசாயிகள் அதிகரித்தால், கொள்முதல் விலையை நிறுவனங்கள் குறைத்து விடுகின்றன. உரிய விலை கிடைக்காததால், தீவன செலவை விவசாயிகள் குறைப்பது, பால் உற்பத்தி குறையக் காரணமாகிறது. அடிக்கடி மாறக்கூடிய வருவாயால், விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஊக்கம் இழக்கின்றனர். இந்த தவறான நடைமுறையே, பால் உற்பத்தி வளர்ச்சியை சரிய செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கிராமங்களில் கட்டடம் கட்டுவதால் மட்டும் பால் உற்பத்தியை அதிகரித்துவிட முடியாது. கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் இதற்காக செய்யப்பட்ட முதலீட்டால், பால் உற்பத்தி அதிகரிக்கவில்லை