மேலும் செய்திகள்
சென்னை ஐ.ஐ.டி., உடன் அப்பல்லோ மைக்ரோ ஒப்பந்தம்
10 minutes ago
தமிழகத்தில் பேட்டரி சேமிப்புக்கு ஆர்டர் பெற்ற வாரீ குழுமம்
13 minutes ago
விக்ரம் சோலார் தமிழகத்தில் உற்பத்தி துவக்கம்
15 minutes ago
புதுடில்லி:நலிந்த பிரிவுகளை சேர்ந்த 87,000 இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவுள்ளதாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சங்கமான நாஸ்காம் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. ஐ.பி.எம்., நிறுவனத்துடன் இணைந்து, தகவல் தொழில்நுட்ப துறை பணிகளுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில் இதை நாஸ்காம் பவுண்டேஷன் வழங்கவுள்ளது. ஏ.ஐ., சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலடிக்ஸ், புரபஷனல் டெவலப்மென்ட் ஆகியவற்றில் சமீபத்திய தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படும் என அது தெரிவித்துள்ளது. வரும் 2030க்குள் உலகம் முழுவதும் 3 கோடி பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும் ஐ.பி.எம்., நிறுவனத்தின் இலக்கில், நம் நாட்டில் 87,000 பேருக்கு அந்நிறுவனம் இதை செய்யவுள்ளது.
10 minutes ago
13 minutes ago
15 minutes ago