உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  புதிய ஜி.டி.பி., கணக்கீடு: மத்திய அரசு விளக்கம்

 புதிய ஜி.டி.பி., கணக்கீடு: மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.80 சதவீதம் வளர்ந்துள்ளதாக புதிய ஜி.டி.பி., தரவுகள் வெளியாகின. ஆனால், கடந்த ஆண்டின் கணக்கீட்டு மதிப்பில் செய்யப்பட்ட திருத்தமே இந்த கூடுதல் வளர்ச்சிக்கு காரணம் என சர்ச்சை எழுந்துள்ளது. பழைய கணக்கீட்டின்படி, 2025-26 முதல் காலாண்டு ஜி.டி.பி., 86.05 லட்சம் கோடி ரூபாயாகும். புதிய கணக்கில் அது 80 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் ஜி.டி.பி., 88.27 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. பழைய மதிப்போடு ஒப்பிட்டால் உண்மையான வளர்ச்சி 2.60 சதவீதம் மட்டுமே என முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திரா கார்க் விமர்சித்திருந்தார். இதை மறுத்துள்ள மத்திய அரசு, பழைய கணக்கீடு 2011--12 அடிப்படை ஆண்டை கொண்டது. புதிய தரவுகள் 2022--23 அடிப்படை ஆண்டின்படி கணக்கிடப்பட்டவை. முற்றிலும் மாறுபட்ட இரண்டு அடிப்படை ஆண்டுகளை ஒப்பிடுவது தவறு என்று கூறியது.மேலும், வளர்ச்சியை அதிகமாக காட்ட பழைய தரவுகள் குறைக்கப்படவில்லை என்றும், வாகன விற்பனை, சிமெண்ட் மற்றும் ஸ்டீல் துறைகளில் உள்ள வலுவான வளர்ச்சி, 7.80 சதவீத ஜி.டி.பி., வளர்ச்சியோடு கச்சிதமாக ஒத்துப்போகிறது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. ஆப்பிளை ஆப்பிளுடன் தான் ஒப்பிட வேண்டுமேயன்றி, ஆரஞ்சுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று, சுபாஷ் சந்திரா கார்க் கருத்துக்கு மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
செப் 04, 2026 15:53

லைஸ்.. லைஸ்.. ஸ்டேட்டிஸ்டிக்ஸ்


Sridhar
செப் 04, 2026 15:16

அப்போ Q1 2025 வளர்ச்சி என்னவாகும்? 21-22 ஐ அடிப்படையாக வைத்து கணக்கீடு செய்வதென்றால், அந்த வருடத்திலிருந்து எல்லா GDP நிலைகளையும் தெரிவித்து இந்த ஐந்து வருடங்களில் நாம் என்ன வளர்ச்சி என்று நினைத்துக்கொண்டிருந்தோம், உண்மையில் அவை எவ்வளவு ன்று கூறினால் ஒரு தெளிவு பிறக்கும். அதைவிட்டுவிட்டு இன்றைய வளர்ச்சியை தூக்கி காண்பிப்பதற்கு முந்தய ஆண்டு வளர்ச்சியை குறைத்தால், அதேபோன்று அடுத்த ஆண்டும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்? வளர்ச்சி சதவிகிதத்தை விட நம்பகத்தன்மை அதிக முக்கியம்.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ