உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / செய்யாறில் ரூ.320 கோடியில் புதிய ஆலை

செய்யாறில் ரூ.320 கோடியில் புதிய ஆலை

சென்னை:இத்தாலி நாட்டைச் சேர்ந்த 'பான்பிக்லியோலி' குழுமத்தின், 'பான்பிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ்' நிறுவனம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், 320 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது.அங்கு, 25 ஏக்கரில் அமையும் ஆலைக்கு, நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலையில், 'கியர்பாக்ஸ்' சாதனங்கள் தயாரிக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் தயாரிப்பை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆலையால், 150 வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்நிறுவனம், சென்னை அடுத்த பல்லாவரத்தில், உலகளாவிய திறன் மையத்தை அமைத்துள்ளது.பான்பிக்லியோலி தலைவர் சோனியா கூறுகையில், “இந்தியாவில் கணிசமான வளர்ச்சி அடைய, எங்கள் நிறுவனம் முழு திறனுடன் தயாராக உள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை