உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  புதிய சோலார் தயாரிப்புகள் ஸ்வெலெக்ட் அறிமுகம்

 புதிய சோலார் தயாரிப்புகள் ஸ்வெலெக்ட் அறிமுகம்

சென்னை: சென்னையை சேர்ந்த சூரிய மின்சக்தி நிறுவனமான, 'ஸ்வெலெக்ட் எனர்ஜி', 'நியுமர்ஜி' என்ற பெயரில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, அதன் நிர்வாக இயக்குநர் அருள் குமார் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் செல்லப்பன் தெரிவித்ததாவது: 'நியுமரிக் பவர் சிஸ்டம்ஸ்' நிறுவனம், தற்போது ஸ்வெலெக்ட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. கோவையில் உள்ள தொழிற்சாலையின் சூரிய மின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 1 ஜிகாவாட். இதனை, 2.2 ஜிகாவாட்டாக உயர்த்த 150 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. விரிவாக்க பணிகளின் ஓர் அங்கமாக, 'நியுமர்ஜி' என்ற பெயரில், புதிய தயாரிப்பு தொகுப்பை அறிமுகம் செய்கிறோம். வீடுகள், சிறு அலுவலகங்களுக்காக 1-10 கி.வா., 'நியூமர்ஜி ஹோம்' சோலார் பேனல்கள், 5-20 கி.வா திறனுள்ள 'நியுமர்ஜி ஹைப்ரிட்' பேட்டரிகள், தொழிற்சாலைகளுக்காக 3-50 கி.வா., திறனுள்ள, 'நியூமர்ஜி ஹெச்.பி' பேட்டரிகள் ஆகி யவை இவற்றில் அடங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை