உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்களை அடிச்சிக்க ஆளில்லை

தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்களை அடிச்சிக்க ஆளில்லை

புதுடில்லி: தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் உலகளவில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த நிதியாண்டில் 11.51 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 14 சதவீதம் அதிகம்.தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக, முதலிடம் வகிக்கின்றனர். கடந்த 2016 - 17ம் நிதியாண்டில் 5.18 லட்சம் கோடி ரூபாயை அனுப்பிய நிலையில், கடந்த எட்டு நிதியாண்டுகளில் இருமடங்காகி உள்ளது.https://x.com/dinamalarweb/status/1939901119045804307இதன் வாயிலாக, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தே 45 சதவீதம் பணம் அனுப்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழ் நாட்டு அறிவாளி
ஜூலை 01, 2025 11:35

ஆமாம். நாங்கள் வெளிநாடுகளில் அதிக தொகை கொடுத்து முடி வெட்டுவது கூட இல்லை. இவ்வாறாக சேமித்த பணத்தை அனுப்பி இங்கு சொத்து வாங்கி குவிப்போம். இவர்கள் இந்திய திரும்பி வரும் பொது இங்கும் விலைவாசி விண்ணைத்திடும் என தெரியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை