உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சந்தேக பரிவர்த்தனைகள் பதஞ்சலிக்கு நோட்டீஸ்

சந்தேக பரிவர்த்தனைகள் பதஞ்சலிக்கு நோட்டீஸ்

சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, மத்திய கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அசாதாரண மற்றும் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், எவ்வளவு தொகை என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. கார்ப்பரேட் நிர்வாக விதிமீறல்கள் மற்றும் திரட்டிய நிதி வேறு காரணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பதஞ்சலி நிறுவனம், அரசின் விசாரணை வளையத்துக்குள் வருவது இது முதல்முறையல்ல; ஏற்கனவே வரி செலுத்தாதது, தவறாக ரீபண்டு கோரியது உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !