உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நுமாலிகார் ரீபைனரிக்கு நவரத்னா அந்தஸ்து

நுமாலிகார் ரீபைனரிக்கு நவரத்னா அந்தஸ்து

ம த்திய பொதுத்துறை நிறுவனமான நுமாலிகார் ரீபைனரிக்கு நவரத்னா நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் எக்ஸ் தளத்தில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்கீழ் இயங்கி வந்த நுமாலிகர் ரீபைனரி நிறுவனத்துக்கு நவரத்னா அந்தஸ்தை வழங்க நிதியமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அந்தஸ்தை பெறும் 27வது பொதுத்துறை நிறுவனமான நுமாலிகார், 2024- - 25ல் 25,147 கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளது. நவரத்னா நிலைக்கு உயரும் நிறுவனங்களுக்கு நிதி மற்றும் செயல்பாட்டில் தன்னாட்சி அதிகாரம் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ