உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்திகள்

எண்கள் சொல்லும் செய்திகள்

32,000 கோடி

இந்திய ரிசர்வ் வங்கி, 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு அரசு பத்திரங்களை மீண்டும் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. மீண்டும் வெளியிடப்படும் இரண்டு பத்திரங்களில், வருகிற 2039 நவம்பர் 18ம் தேதியன்று முதிர்ச்சியடையும் 6.92 சதவீத அரசு பத்திரங்கள் மற்றும் 2065 ஏப்ரல் 15ம் தேதியன்று முதிர்ச்சியடையும் 6.90 சதவீத அரசு பத்திரங்கள் ஆகும். மறு வெளியீடு என்பது, பத்திர சந்தைகளில் ஏற்கனவே கிடைக்கும் பத்திரங்களை அதிகமாக விற்பனை செய்வதை குறிக்கிறது. இது அரசின் வழக்கமான வாங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

8.77 சதவிகிதம்

கடந்த மே மாதத்தில் பெட்ரோல் விற்பனை தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக அதிகரித்துள்ளது. ஆனால், டீசல் விற்பனை மந்தமாகவே இருந்ததாக தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன. மே மாதத்தில் பெட்ரோல் விற்பனை 8.77 சதவீதம் உயர்ந்து 3.76 மில்லியன் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 3.46 மில்லியன் டன்னாக இருந்தது. டீசல் விற்பனை, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 8.41 மில்லியன் டன்னில் இருந்து, 2 சதவீதம் அதிகரித்து 8.57 மில்லியன் டன்னாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !