உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்திகள்

எண்கள் சொல்லும் செய்திகள்

25,051கடந்த நிதியாண்டில் நாட்டின் டயர் ஏற்றுமதி 9 சதவீதம் அதிகரித்து 25,051 கோடி ரூபாயாக இருந்தது என வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 23,073 கோடி ரூபாயாக இருந்தது. டயர் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இயற்கை ரப்பர் தேவையில் 40 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுவதாக சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15,786கடந்த மாதம் நம் நாட்டில் அதிகம் விற்பனையான பயணியர் கார்கள் பட்டியலில், ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கார்கள் முதலிடம் பிடித்துஉள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் 15,786 கிரெட்டா கார்கள் விற்பனையாகியுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுசூகியின் டிசையர் மற்றும் பிரெஸ்ஸா ரக கார்கள் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை