உள்ளூர் செய்திகள்

எண்கள்

900

எஸ்ஸார் குழுமத்தை சேர்ந்த அல்ட்ரா காஸ் அண்டு எனர்ஜி, 900 கோடி ரூபாய் முதலீட்டில், நாடு முழுதும் தன் எல்.என்.ஜி., சில்லரை விற்பனை நிலையங்களை 100 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் என முக்கிய தொழில் மற்றும் தளவாட மையங்களில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஆறு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பசுமை எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், இ.வி., சார்ஜிங் வசதியும் அமைக்கப்பட உள்ளது.

4,250

மும்பையைச் சேர்ந்த ஸ்வான் டிபன்ஸ் அண்டு ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், குஜராத் கடல்சார் வாரியத்துடன் 4,250 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இதன்படி, கப்பல் கட்டுவதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், உற்பத்தி திறனை அதிகரித்தல் மற்றும் 200 ஏக்கரில் கடல் சார் மையம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதில், ஆண்டுக்கு 1,000 இளைஞர்களுக்கு கப்பல் வடிவமைப்பு, ஆய்வகம், மென்பொருள் வாயிலாக மறுவடிவமைப்பு செய்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !