உள்ளூர் செய்திகள்

எண்கள்

250கோடி ரூபாய் முதலீடு

தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ்., இண்டஸ்ட்ரியல் அண்டு லாஜிஸ்டிக்ஸ், 250 கோடி ரூபாய் முதலீட்டில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உலக தரத்திலான தளவாட பூங்கா அமைக்க உள்ளது. சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 17 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள பூங்கா முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, 1,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும் என டி.வி.எஸ்., - ஐ.எல்.எப்., தெரிவித்துஉள்ளது.

5,000

லண்டனில் செயற்கை நுண்ணறிவு மையம், டிசைன் ஸ்டூடியோவை அமைக்க இருப்பதாக டி.சி.எஸ்., நிறுவனம் அறிவித்துள்ளது.இதன் வாயிலாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என டி.சி.எஸ்., நிறுவனம்தெரிவித்துள்ளது. தற்போது பிரிட்டனில் 42,000க்கும் மேற்பட்ட நேரடி, மறைமுக வேலைகளை இந்நிறுவனம் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

6,000

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த டைடு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, தயாரிப்பு மேம்பாடு, மென்பொருள் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் சேவைகளை அளித்து வரும் இந்நிறுவனம், அடுத்தாண்டு முதல் முதலீட்டை துவங்க உள்ளது. இதனால், 800 பேருக்கு வேலை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை