உள்ளூர் செய்திகள்

எண்கள்

45,000 இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டுக்குள், 45,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஹூண்டாய் மோட்டார் திட்டமிட்டு உள்ளது. உலகளவில் இந்தியாவை இரண்டாவது மிகப்பெரிய மையமாக மாற்றவும், புதிதாக 26 கார்களை அறிமுகம் செய்யவும்; ஏற்றுமதி பங்களிப்பை 30 சதவீதமாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்து உள்ளதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் முனோஸ் தெரிவித்துள்ளார். 6.74 க டந்த செப்டம்பரில், நாட்டின் ஏற்றுமதி 6.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதே காலத்தில் தங்கம்,வெள்ளி மற்றும் உரங்கள் இறக்குமதி அதிகரித்ததால், நாட்டின் இறக்குமதி 16.60 சதவீதம் அதிகரித்து, 6.03 லட்சம் கோடி ரூபாயானது. இதனால், வர்த்தக பற்றாக்குறை, ஓராண்டில் இல்லாத அளவுக்கு, 2.74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ