உள்ளூர் செய்திகள்

 எண்கள்

7 முன்னர் அதானி வில்மர் என்றழைக்கப்பட்ட ஏ.டபிள்யு.எல்., அக்ரி பிஸினஸ் நிறுவனத்தின் மீதமுள்ள 7 சதவீத பங்குகளை, அதானி என்டர்பிரைசஸ், சந்தையில் விற்பனை செய்துள்ளது. பார்ச்சூன் பிராண்டு பெயரில், சமையல் எண்ணெய் வினியோகத்தில் ஈடுபட்டுள்ள ஏ.டபிள்யு.எல்., அக்ரி பிஸினஸ் நிறுவனத்தின் இருந்து விலக முடிவு செய்த அதானி குழுமம், நேற்றுடன் சேர்த்து, தன் வசமிருந்த 44 சதவீத பங்குகளை, கிட்டத்தட்ட 15,707 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. 7,297 ப ட்ஜெட் விமான சேவையை வழங்கி வரும் இண்டிகோ, தன் துணை நிறுவனமான இண்டிகோ ஏவியேஷன் பைனான்சியல் சர்வீசஸில் 7,297 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக சந்தையில் தெரிவித்துள்ளது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் உரிமை பங்கு மற்றும் மாற்றத்தகுந்த முன்னுரிமை பங்குகள் வாயிலாக திரட்ட உள்ளது. கடந்த 2023 அக்டோப ரில் துவங்கப்பட்ட இண்டிகோ ஏவியேஷன் பைனான்ஸ் சர்வீசஸ், விமானங்கள் மற்றும் அது தொடர்பான சொத்துக்களை வாங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி