| ADDED : நவ 25, 2025 01:07 AM
10,200 பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெட்ரோலிய நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், 6 சதவீதம் அதானி கிரீன் பங்குகளை, 10,200 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2021 முதல் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் மதிப்பு கணிசமாக உயர்ந்திருக்கும் சூழலில், லாபத்தை ஈட்ட பங்குகளை விற்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது டோட்டல் எனர்ஜியின் துணை நிறுவனங்கள் வசம், 19 சதவீத அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் உள்ளது. 25 வரும் 2028ம் ஆண்டுக்குள்ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ரியல் எஸ்டேட் தனியார் கடன் வளர்ச்சி சந்தை மதிப்பு 7.92 லட்சம் கோடி முதல் 9.70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் பங்களிப்பு 20 -- 25 சதவீதமாக இருக்கும் என, நைட் பிராங்க் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இந்திய ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள், பல்வகை நிதி கட்டமைப்புகள், மற்றும் நீடித்த தேவை ஆகியவை காரணம் என கூறப்பட்டுள்ளது. 14 நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்- முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், ஆசியான் நாடுகளில் இருந்து காகித மற்றும் காகித அட்டை இறக்குமதி, 14 சதவீதம் அதிகரித்து உள்ளதாக இந்திய காகித உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆசியான் நாடுகளில் இருந்து இறக்குமதி, சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து வருவது தங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாக கவலை தெரிவித்துள்ளது.