உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிக்கலில் ஆயில் இந்தியா டிவிடெண்டு

சிக்கலில் ஆயில் இந்தியா டிவிடெண்டு

புதுடில்லி,:ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையால், அவற்றில் முதலீடு செய்துள்ள நம்நாட்டின் ஆயில் இந்தியா நிறுவனத்தின் 2,640 கோடி ரூபாய் டிவிடெண்டு தொகைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஜெ.எஸ்.சி., வான்கோர்நெப்ட் மற்றும் டஸ் யுரையக் ஆகிய நிறுவனங்களில், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஆயில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் ஆயில் இந்தியா இந்நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுக்கான டிவிடெண்டு தொகை ரஷ்ய வங்கிகளில் சிக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !