மேலும் செய்திகள்
தொழில் துறை வளர்ச்சி 2.70 சதவீதமாக சரிவு
29-May-2025
புதுடில்லி:மஹாராஷ்டிராவில் கனமழையால் காய்கறிகள் வருகை குறைந்ததன் காரணமாக, புனே சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. உற்பத்தி மற்றும் அரசின் கிடங்கு சேமிப்புகள் அதிகரித்த போதிலும், பருவம் தவறிய மழையால், வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.அரசு வெங்காய கொள்முதலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால், விலை இன்னும் சற்று அதிகரிக்கும் என, கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக்கின் லாசல்கான் மொத்த விற்பனை சந்தையில், கடந்த மே 15ம் தேதி சராசரி கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு 11.50 ரூபாயாக இருந்த நிலையில், மே 31ம் தேதி அன்று 20 சதவீதம் அதிகரித்து 14 ரூபாயாக இருந்தது.கூடுதலாக கையிருப்பு வெங்காயத்தை மத்திய அரசு சந்தையில் விடுவித்தால், இதன் தாக்கம், நாடு முழுதும் எதிரொலிக்காது என கூறப்படுகிறது.இதுகுறித்து மஹாராஷ்டிரா வெங்காய உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருப்பதாவது: மே மாதத்தில் பெய்த பருவம் தவறிய மழையால், வெங்காய விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர்.அரசு நிறுவனங்களான என்.ஏ.எப்.இ.டி., எனப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் என்.சி.சி.எப்., எனப்படும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்ட அளவில் வெங்காயத்தை 10 சதவீதமும், மே மாதத்தில் 45 சதவீதமும் கொள்முதல் செய்ய வேண்டியிருந்தது. இந்த காலக்கெடுவை பின்பற்றியிருந்தால், கிட்டத்தட்ட 1.65 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும்.மாறாக, போதிய உள்கட்டமைப்புகள் வசதி இல்லாததாலும், கொள்முதலில் தாமதம் ஏற்படுத்தியதாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
29-May-2025