உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வருமான வரி சட்ட திருத்தம் மக்கள் பரிந்துரைக்கலாம்

வருமான வரி சட்ட திருத்தம் மக்கள் பரிந்துரைக்கலாம்

புதுடில்லி,:வருமான வரி சட்டங்களில் இடம்பெற வேண்டிய திருத்தங்கள் குறித்து, பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, 1961 மற்றும் 1962ம் ஆண்டு வருமான வரி சட்டங்களை, சுருக்கமாக, அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலும், எளிமைப்படுத்த மறு சீராய்வு செய்யப்படும் என்றும் இதனால், வழக்குகள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.இந்நிலையில், வருமான வரி சட்டங்களை மறுசீராய்வு செய்யும் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு, அதிகாரிகள் அடங்கிய குழுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நியமித்துள்ளது. வருமான வரி சட்டத்தில் இடம்பெற வேண்டிய திருத்தங்கள் குறித்தும் மொழி எளிமைப்படுத்தல், வழக்குகளை குறைத்தல், காலாவதியான விதிகள் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் தங்கள் பரிந்துரைகளை வருமான வரித்துறையின் இ --போர்ட்டலில், தங்கள் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !