மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள்
மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் முதியோர் பராமரிப்பு முதியோர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்த, பிரத்யேகக் கட்டமைப்பு உருவாக்கப்படும். இதற்காக, 1.50 லட்சம் பேருக்கு பல்திறன் கொண்ட பராமரிப்பாளர்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பெண்கள் முன்னேற்றம் சுயஉதவி குழுக்களை சார்ந்த தொழில்முனைவோருக்காக, கிளஸ்டர் அளவில் சமூக பங்களிப்புடன் கூடிய, 'ஷீ மார்ட்' எனும் சில்லரை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாடு 'திவ்யாங்ஜன் கௌஷல் யோஜனா' திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு கவுரவமான வாழ்வாதார வாய்ப்புகள் உருவாக்கப்படும். உதவி உபகரணங்கள் 'திவ்யாங் சஹாரா யோஜனா' வாயிலாக, தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உயர்தரமான உதவி உபகரணங்கள் உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்யப்படும். திவ்யாஷா மையங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான, 'பிரதமரின் திவ்யாஷா மையங்கள்' நவீன வசதிகளுடன் கூடிய சில்லரை விற்பனை மையங்களாக தரம் உயர்த்தப்படும். மனநல மருத்துவம் மனநல சிகிச்சையை மேம்படுத்தும் விதமாக, இரண்டாவது 'நிம்ஹான்ஸ்' நிறுவனம் உருவாக்கப்படும். மேலும், ராஞ்சி மற்றும் தேஜ்பூரில் உள்ள தேசிய மனநல கழகங்கள் மேம்படுத்தப்படும். அவசர சிகிச்சை மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விபத்து காய சிகிச்சை மையங்கள் புதிதாக நிறுவப்படும்.