உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மாதாந்திர சராசரி வருவாயாக ரூ.157 பெறும் போன் நிறுவனங்கள்

மாதாந்திர சராசரி வருவாயாக ரூ.157 பெறும் போன் நிறுவனங்கள்

புதுடில்லி:தொலைபேசி வாடிக்கையாளர் ஒருவர் வாயிலாக, மாதத்துக்கு சராசரியாக தொலைபேசி நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாய், 157 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தொலைத்தொடர்பு கண்காணிப்பு ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.இந்திய தொலைத்தொடர்பு சேவை செயல்பாட்டுக்கான குறியீட்டு அறிக்கையை ட்ராய் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான காலாண்டில் தொலைபேசி நிறுவனங்களின் வருவாய், ஒரு வாடிக்கையாளருக்கு சராசரியாக, முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது, மாத அடிப்படையில், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு, மார்ச் மாதத்தில் 153 ரூபாயாக இருந்த சராசரி வருவாய், ஜூனில் 157 ரூபாயாக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரி வருவாய் 211 ரூபாயாக இருந்தது. ஜியோ 182 ரூபாயும், குறைந்தபட்சமாக வோடபோன் ஐடியா 146 ரூபாயும் வருவாய் ஈட்டியதாக ட்ராய் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி