மேலும் செய்திகள்
ஸ்டார்ட் அப் கட்டுரை: தொழில்முனைவு முதல் முதலீடு
04-Oct-2026
புதுடில்லி: இந்தியாவுக்கென சொந்தமாக ஸ்மார்ட்போன் பிராண்டை உருவாக்குவதற்கான விரிவான செயல்திட்டத்தை மத்திய அரசு ஒரு மாதத்தில் வெளியிட உள்ளதாக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறி த்து அவர்கள் கூறியதாவது: உள்நாட்டில் ஸ்மார்ட்போன் உற் பத்தி, உதிரிபாகங்கள் மற்றும் வடிவமைப்புகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஒருங்கிணைத்து, உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளை உருவாக்க, ஒரு புதிய, விரிவான செயல்திட்டம் ஒரு மாதத்தில் வெளியி டப்பட உள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக, 3 அல்லது 4 தனியார் நிறுவனங்கள் இந்தியாவை மையமாக கொண்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளை உருவாக்கும். ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு தளத்தை அடி ப்படையாக கொண்ட போன்கள் உருவாக்கப்பட உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
04-Oct-2026