உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஹைதராபாதில் நவ., 25 முதல் கோழி பண்ணை கண்காட்சி

ஹைதராபாதில் நவ., 25 முதல் கோழி பண்ணை கண்காட்சி

புதுடில்லி : ஹைதராபாதில், 17வது 'பவுல்ட்ரி இந்தியா எக்ஸ்போ' என்ற கோழி பண்ணை கண்காட்சி, வரும் நவ., 25ம் தேதி துவங்குகிறது. இது குறித்து, இந்திய பவுல்ட்ரி உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஹைடெக்ஸ் சர்வதேச வர்த்தக கண்காட்சி மையத்தில், நவ., 25 முதல் 28ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில், 50 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த கண்காட்சியில், கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தியில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான நவீன தொழில்நுட்ப தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், புதிய நோய்கள், தீவனம் மற்றும் உர மேலாண்மை, ஆட்டோமேஷன், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பான தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை