உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சுந்தரம் ஆட்டோ பிரிவை வாங்குகிறது பிரிக்கால்

சுந்தரம் ஆட்டோ பிரிவை வாங்குகிறது பிரிக்கால்

கோவை, டிச. 4-கோவையைச் சேர்ந்த வாகன தொழில்நுட்ப நிறுவனமான பிரிக்கால், சுந்தரம் ஆட்டோ காம்பொனன்ட்ஸ் நிறுவனத்தின் பிளாஸ்டிக் சொலுஷன்ஸ் பிரிவை கையகப்படுத்தும் தகவலால், பங்குச் சந்தையில் பிரிக்கால் நிறுவன பங்கு விலை உயர்ந்தது.பங்குச் சந்தையில் பிரிக்கால் அளித்த தகவலின்படி, 215 கோடியே 30 லட்ச ரூபாய்க்கு எஸ்.ஏ.சி.எல்., எனப்படும் சுந்தரம் ஆட்டோ காம்பொனன்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இன்ஜெக் ஷன் மோல்டடு பிளாஸ்டிக் சொலுஷன்ஸ் பிரிவை கையகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை வாயிலாக, பிரிக்காலின் ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தக மதிப்பு, 730 கோடியாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் பிரிக்கால் நிறுவனப் பங்கு விலை நேற்று 5 சதவீத உயர்வு கண்ட நிலையில், பின்னர் வர்த்தக முடிவில் 1 சதவீதம் உயர்வுடன் நிறைவடைந்தது.முன்னதாக, சக்தி ஆட்டோ காம்பொனன்ட்ஸ் நிறுவனத்தை பிரிக்கால் கையகப்படுத்தியதாக நேற்றைய பக்கத்தில் தவறுதலாக செய்தி வெளியாகி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி