உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அரிய கனிமங்கள் மறுசுழற்சி வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

அரிய கனிமங்கள் மறுசுழற்சி வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

புதுடில்லி:நாட்டின் அரிய கனிமங்கள் சுத்திகரிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக, ஊக்கத்தொகை திட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அரிய கனிமங்கள் சுத்திகரிப்பை ஊக்குவிக்க, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. தற்போது நெறிமுறைகள் வெளியாகியுள்ளதால், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியுள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் மத்திய கனிம வள அமைச்சகத்தின் இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.mstcecommerce.com/ auctionhome/mlcln/ என்ற லிங்க் வாயிலாக நேரடியாகவும் விண்ணப் பிக்கலாம் இந்த திட்டத்தின் படி, மின்னணு கழிவுகள், பேட்டரிகளுக்கான மறுசுழற்சி வசதிகள் அமைக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். நடப்பாண்டு 2025 - 26 முதல் 2030 - 31 வரை ஆறு நிதியாண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படும். பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். பெரிய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 50 கோடி ரூபாயும்; சிறிய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 25 கோடி ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும். செயல்பாட்டு செலவின மானியத்தை பொறுத்தவரை முறையே 10 கோடி ரூபாயும்; 5 கோடி ரூபாயும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை