உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  அணுசக்தி துறையில் தடம் பதிக்கும் ரெக்டிபையர்ஸ்

 அணுசக்தி துறையில் தடம் பதிக்கும் ரெக்டிபையர்ஸ்

புதுடில்லி: டிரான்ஸ்பார்மர்ஸ் அண்டு ரெக்டிபையர்ஸ் இந்தியா நிறுவனம், அணுசக்தி துறையில் தனது முதல் ஆர்டரை பெற்றுள்ளதன் வாயிலாக, அத்துறையில் முதல் முறையாக தடம் பதிக்க உள்ளது. கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் என்.பி.சி.ஐ.எல்., அணுமின் கழகத்தின் அணுமின் திட்டத்திற்கான ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மர்களை வினியோகம் செய்வதற்கான ஆர்டர், இந்நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இந்த ஆர்டரை ரெக்டிபையர்ஸுக்கு மேகா இன்ஜினியரிங் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றி, மின் வினியோக கட்டமைப்புடன் இணைப்பதற்கான முக்கிய மின் கட்டமைப்பின் ஒரு பகுதியாக ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மர்கள் செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை