உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தேன் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை குறைப்பு

தேன் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை குறைப்பு

புதுடில்லி:தேனுக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, மத்திய அரசு கணிசமாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு டன் தேனுக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, கிட்டத்தட்ட 1.74 லட்சம் ரூபாயிலிருந்து 1.22 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில், இந்திய தேனின் போட்டித் தன்மையை அதிகரிக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள், வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில், தேன் ஏற்றுமதியில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், கனடா உள்ளிட்ட நாடுகள், இந்திய தேன் ஏற்றுமதிக்கான முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ