மேலும் செய்திகள்
மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவீதமாக உயர்ந்தது
16-Sep-2025
புதுடில்லி, : நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.54 சதவீதமாக சரிந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 2.07 சதவீதமாக இருந்தது. செப்டம்பரில், கடந்த 2017 ஜூன் மாதத்துக்கு பின், 99 மாதங்களில் மிகக் குறைந்த அளவாக 1.54 சதவீதத்தை பணவீக்கம் தொட்டுள்ளது. காய்கறிகள், சமையல் எண்ணெய், பழங்கள், பருப்பு வகைகள், முட்டை, எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைவே பணவீக்கம் குறைய முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட் களின் விலை தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்துள்ளது. உணவுப் பொருட்கள் பிரிவு பணவீக்கம் கடந்த மாதம் மைனஸ் 2.28 சதவீதமாக இருந்தது. இது முந்தைய ஆகஸ்டில் மைனஸ் 0.64 சதவீதமாக இருந்தது. கடந்த செப்டம்பரை பொறுத்தவரை, பணவீக்கம் கிராமப்புறங்களில் 1.07 சதவீதமாகவும்; நகர்ப்புறங்களில் 2.04 சதவீதமாகவும் இருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்க கணிப்பு 3.10 சதவீதத்திலிருந்து 2.60 சதவீதமாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக பணவீக்கம் 2.77% கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு செப்டம்பரில் அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள முதல் ஐந்து மாநிலங்களில், 2.77 சதவீத பணவீக்கத்துடன் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கேரளா, ஜம்மு - காஷ்மீர், கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகியவை முதல் நான்கு இடங்களில் உள்ளன. மாதங்கள் பணவீக்கம் (%) 2024 செப்டம்பர் 5.49 அக்டோபர் 6.21 நவம்பர் 5.48 டிசம்பர் 5.22 2025 ஜனவரி 4.26 பிப்ரவரி 3.61 மார்ச் 3.34 ஏப்ரல் 3.16 மே 2.82 ஜூன் 2.10 ஜூலை 1.55 ஆகஸ்ட் 2.07 செப்டம்பர் 1.54
16-Sep-2025