உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆர்.பி.பி., இன்ப்ராவுக்கு ரூ.28 கோடி சிப்காட் ஆர்டர்

ஆர்.பி.பி., இன்ப்ராவுக்கு ரூ.28 கோடி சிப்காட் ஆர்டர்

ஈரோட்டைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனமான ஆர்.பி.பி., இன்ப்ரா புராஜெக்ட்ஸின் சந்தை மதிப்பு 777 கோடி ரூபாய். கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து, ஓசூர் சூளகிரி சிப்காட் வளாகத்துக்கு, நாளொன்றுக்கு 70 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை கொண்டு செல்வதற்கான திட்டத்தை வடிவமைத்து, கட்டுமான பணிகள், ஓராண்டுக்கு பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்கு, 28.25 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.பணிகளை 10 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பங்கு சந்தையில் ஆர்.பி.பி., நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !