உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  உள்கட்டமைப்பு மேம்பாடுக்கு ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

 உள்கட்டமைப்பு மேம்பாடுக்கு ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

புதுடில்லி: மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது: உள்நாட்டு விமான போக்குவரத்தை வலுப்படுத்தும் வகையில், வாரணாசி, கோட்டா, பாக்டோக்ரா, பிஹ்டா நகரங்களில் மொத்தம் 7,339 கோடி ரூபாய் முதலீட்டில், விமான நிலையங்கள் மேம்பாடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில், மஹாராஷ்டிராவின் வாதவான் என்னுமிடத்தில் மிகப்பெரிய துறைமுகம் கட்டுவதற்கும், கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் மேம்பாட்டுக்கு சேர்த்து, மொத்தம் 1,45,945 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 936 கி.மீ., தொலைவை கொண்ட அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையில் சாலை அமைத்தல் உட்பட நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கு அதிகபட்சமாக 1,97,644 கோடி ரூபாயும், ரயில்வே துறையில், 5,869 கி.மீ., தொலைவிலான 43 ரயில் மேம்பாட்டு திட்டங்களுக்கு 1,52,583 கோடி ரூபாயும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ