உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / யூரோவுக்கு எதிரான -ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

யூரோவுக்கு எதிரான -ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

புதுடில்லி:இந்திய ரூபாய்க்கு எதிரான யூரோவின் மதிப்பு, 102 ரூபாயாக வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலகளாவிய சந்தைகளின் ஏற்றம், இறக்கம், மூலதன வெளியேற்றம் மற்றும் ரூபாய் தேவை பலவீன மடைதல் ஆகியவற்றுக்கு மத்தியில் யூரோவின் மதிப்பு வலுவடைந்துள்ளது. கடந்த ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய ரூபாய்க்கு எதிரான யூரோவின் மதிப்பு 15 சதவீதம் அதிகரித்து, இறுதியாக, கடந்த 7ம் தேதி நிலவரப்படி, ஒரு யூரோ 102 ரூபாயானது. இந்த உயர்வால் ஐரோப்பிய பயணங் களுக்கு திட்டமிடும் இந்திய சுற்றுலா பயணியருக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், உணவு, ஷாப்பிங், போக்குவரத்து, கேளிக்கைகள் உள்ளிட்ட செலவுகள், விசா கட்டணங்கள் மற்றும் அன்னிய செலாவணி பரிவர்த்தனைகளின் செலவுகள் மேலும் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ