உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சேவைத்துறை ஏற்றுமதி பியோ மகிழ்ச்சி

சேவைத்துறை ஏற்றுமதி பியோ மகிழ்ச்சி

கோவை,:இந்திய ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 2.8 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இதில் சேவைத் துறையின் பங்களிப்பு அதிகமாக உள்ளதாக, இந்திய ஏற்றுமதி அமைப்புகளுக்கான கூட்டமைப்பு (பியோ) தெரிவித்துள்ளது.பியோ தலைவர் ரால்ஹான் அறிக்கை:உலக அளவில் வர்த்தக துறையில், பல்வேறு தடைகள் இருந்தபோதும், இந்திய ஏற்றுமதி மே மாதம் 2.8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு, சேவைத்துறை குறிப்பாக மென்பொருள், ஆலோசனை மற்றும் நிதி சேவைகளில் தொடர்ந்த வளர்ச்சிதான் காரணம். உலகளாவிய மந்தமான சேவை, புவிசார் அரசியல் பதற்றங்கள், கடும் சவால்களுக்கு இடையே, இந்திய சேவைத்துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.இறக்குமதியும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 5.30 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 5.06 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை