உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சேவைகள் ஏற்றுமதி இரண்டாவது மாதமாக சரிவு

சேவைகள் ஏற்றுமதி இரண்டாவது மாதமாக சரிவு

மும்பை:நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி, தொடர்ந்து இரண்டாவது மாதமாக கடந்த பிப்ரவரியிலும் சரிந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த துறையின் ஏற்றுமதி, கடந்த ஜனவரி மாதத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 2.72 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. மாதாந்திர அடிப்படையில் கணக்கிடும்போது இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், கடந்தாண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு பிப்ரவரியில் சேவைகள் துறை ஏற்றுமதி 11.60 சதவீதம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி