உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சேவைகள் துறை ஏற்றுமதி அக்டோபரில் 22 சதவிகிதம் உயர்வு

சேவைகள் துறை ஏற்றுமதி அக்டோபரில் 22 சதவிகிதம் உயர்வு

மும்பை:நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 22.30 சதவீதம் அதிகரித்து, 2.88 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாவது: சேவைகள் துறை ஏற்றுமதி அக்டோபரில் 22.30 சதவீதம் அதிகரித்து, 2.88 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய மாதமான செப்டம்பரில் இது 2.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மறுபுறம், இறக்குமதி அக்டோபரில் 27.90 சதவீதம் அதிகரித்து, 1.45 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ