உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிரிட்டனை விட்டு இடம்பெயர்ந்த ஷ்ரவின் பார்தி மிட்டல்

பிரிட்டனை விட்டு இடம்பெயர்ந்த ஷ்ரவின் பார்தி மிட்டல்

லண்டன்:பிரிட்டனின் வரி சீர்திருத்தங்கள் கடுமையாக்கப்பட்டதால், ஷ்ரவின் பார்தி மிட்டல் இங்கிலாந்தை விட்டு இடம்பெயர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் குடிபுகுந்துள்ளதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் புதிய வரிக் கொள்கையின் அடிப்படையில், வெளிநாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள், பிரிட்டனுக்கு வெளியே வைத்திருக்கும் எந்தவொரு வருமானம் மற்றும் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் ஆதாயங்களுக்கும் வரி செலுத்து வதை தவிர்க்கலாம் என்றொரு விதிவிலக்கு இருந்தது. இந்நிலையில், பிரிட்டனில் புதிதாக பதவியேற்ற தொழிற்கட்சி அரசு, அந்த சலுகைகளை ரத்து செய்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் முதல் மிட்டல் போன்ற நீண்டகால குடியிருப்பாளர்களின் உலகளாவிய வருமானத்திற்கு வரி விதிக்கப்பட்டது. மேலும், வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் மீதான சலுகைகளையும் பிரிட்டன் அரசு ரத்து செய்தது. இதையடுத்து, இந்தியா வின் பணக்கார குடும்பங்கள் ஒன்றின் வாரிசும், இங்கிலாந்து தொலைத்தொடர்பு நிறுவனமான பி.டி., குரூப் பி.எல்.சி.,யின் மிகப்பெரிய தனிநபர் பங்குதாரருமான ஷ்ரவின் பார்தி மிட்டல், 37, பிரிட்டனில் இருந்து வெளியேறி, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு குடிபுகுந்துள்ளதாக புளூம்பெர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த கேள்விக்கு பார்தி மிட்டல் குடும்பத்தினர் பதில்அளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி