மேலும் செய்திகள்
அரசு அலுவலகங்களில் சோலார் மின் நிலையம்
7 minutes ago
வருவாய் 1 கோடி டாலரை கடந்த கோவை நிறுவன மென்பொருள்
19 minutes ago
ரூ.172 கோடிக்கு நிலம் விற்ற லீ மெரிடியன்
23 hour(s) ago
மும்பை : டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடாவின் தாயாரும், மறைந்த ரத்தன் டாடாவின் சித்தியுமான சைமன் டாடா, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில், தன் 95வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் பிறந்த சைமன் டாடா, தன் 23 வயதில், சுற்றுலா பயணியாக கடந்த 1953ல் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவர் நேவல் டாடாவை சந்தித்தார். விவாகரத்து ஆன நேவல் டாடா, சைமனை விட 26 வயது மூத்தவர். இருவரும் 1955ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், மும்பையில் நிரந்தரமாக குடியேறினார் சைமன் டாடா. லேக்மே பிராண்டை, இந்தியாவில் துவக்கிய சைமன் டாடா, 1980களில் இந்தியாவின் அழகுசாதன துறையில் ஒரு குடும்ப பெயராக அதை நிலைநாட்டினார். லேக்மேயை, இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்திடம் 1996ல் டாடா குழுமம் விற்றது. அதன் பின்னரும் தொழில்துறையை விட்டு விலகாத சைமன் டாடா, டிரன்ட் ரீடெய்ல் குழுவின் கீழ் வெஸ்ட்சைடு பிராண்டை உருவாக்கினார்.
7 minutes ago
19 minutes ago
23 hour(s) ago