உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நறுமண பொருட்கள் கண்காட்சி மதுரையில் துவங்கியது

நறுமண பொருட்கள் கண்காட்சி மதுரையில் துவங்கியது

சென்னை: நறுமண பொருட்கள் மற்றும் பூஜை பொருட் களின் கண்காட்சி, மதுரையில் நேற்று தொடங்கியது. மதுரை சிந்தாமணி ஐடா ஸ்கட்டர் ஆடிட்டோரியத்தில், உடனடி சாம்பிராணி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான ‘டிஸ்மா’ சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சி, நாளை (நவ., 29) வரை நடக்கிறது. உற்பத்தியாளர்கள் – வியாபாரிகளை இணைக்கும் ‘பி2பி’ கண்காட்சியாக நடக்கும் இதில், 80க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. சாம்பிராணி, அகர்பத்தி, சென்ட், ஜவ்வாது, கற்பூரம், விபூதி, குங்குமம் மற்றும் இந்தோனேசியா, வியட்நாம், சீன மூலப்பொருட் களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்களும் சலுகை வி லையில் வாங்கலாம். ஒன்றரை மணி நேரம் எரியும் அகர்பத்தி, 45 நொடிகளில் 160 சாம்பிராணி கப் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை கவனத்தை ஈர்த்தன. தமிழகத்தில் 500 கோடி ரூபாயாகவும், இந்திய அளவில் 1 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ள இச்சந்தையில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். சந்தை விரிவாக்கம், நவீன மார்க்கெட்டிங் விழிப்புணர்வுக்கு இந்த வாய்ப்பை தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என கண்காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி