உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஸ்டார்ட் - அப் கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக அதிகரிப்பு

ஸ்டார்ட் - அப் கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக அதிகரிப்பு

புதுடில்லி:ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், இந்நிறுவனங்களுக்கான அதிகபட்ச கடன் தொகையை 20 கோடி ரூபாயாக, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. 'ஸ்டார்ட்அப் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 2022ம் ஆண்டிலிருந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களிடம், 10 கோடி ரூபாய் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறலாம்.

புதிய மாற்றம்

 10 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, 85 சதவீதம் வரை உத்தரவாதம் 10 கோடி ரூபாய்க்கு அதிகமான கடன்களுக்கு, 75 சதவீதம் வரை உத்தரவாதம்  அதிகபட்ச கடன் உத்தரவாதம் 20 கோடி ரூபாய்  நிறுவனங்களுக்கான ஆண்டு உத்தரவாத கட்டணம், 27 சாம்பியன் துறைகளுக்கு 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைப்பு.

பலன்கள்

 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான அபாயம் குறையும் நிதி புழக்கத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்  ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள உதவும்  அதிநவீன கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களை உருவாக்கவும் வழிவகுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ