உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் மாநிலங்கள் ரூ.6,450 கோடி நிலுவை

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் மாநிலங்கள் ரூ.6,450 கோடி நிலுவை

புதுடில்லி: பிரதமரின் 'பசல் பீமா யோஜனா' என்ற பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலங்கள் 6,450 கோடி ரூபாய்க்கும் மேலாக கிளைம் செட்டில்மென்ட் வழங்காமல் இருப்பதாக, மத்திய அரசு பார்லிமென்டில் தெரிவித்துள்ளது.நாடு முழுதும் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பி.எம்., பசல் பீமா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 100க்கும் மேற்பட்ட பயிர்களுக்கு, விதைப்புக்கு முந்தைய பருவத்திலிருந்து, சாகுபடிக்கு பிந்தைய பருவம் வரை ரிஸ்க் கவரேஜ் வழங்கப்படுகிறது.மத்திய - மாநில அரசுகளும், விவசாயிகளும் ஆண்டு தோறும் பிரீமியம் செலுத்த வேண்டும். விவசாயிகளைப் பொறுத்தவரை, ராபி பருவ பயிர்களுக்கு 1.50 சதவீதமும்; கரீப் பருவ பயிர்களுக்கு 2 சதவீதமும்; கேஷ் கிராப்ஸ் எனப்படும் பணப் பயிர்களுக்கு 5 சதவீதமும் பிரீமியம் செலுத்தினால் போதும். மீதமுள்ள பிரீமியத்தை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பகிர்ந்து கொள்ளும். இந்நிலையில், கடந்த 2019 - 20 முதல் 2024 - 25ம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில், மாநிலங்கள் 6,450 கோடி ரூபாய்க்கும் மேலாக பிரீமியத்தை முறையாக செலுத்தாததால், காப்பீடு நிறுவனங்கள் செட்டில்மென்ட் வழங்காமல் இருப்பதாக, மத்திய விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்து உள்ளதாவது: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களே அதிக செட்டில்மென்ட் நிலுவை வைத்து உள்ளன. https://x.com/dinamalarweb/status/1949636207199277119இதை தவிர்க்க, நடப்பு கரீப் பருவம் முதல், மாநிலங்கள் தங்களது பிரீமியம் பங்களிப்பை முன்கூட்டியே செலுத்தும் வகையில், எஸ்க்ரோ கணக்கு துவங்கி, பிரீமியம் தொகையை டிபாசிட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும், விவசாயிகளுக்கான செட்டில்மென்ட்டை வழங்க தாமதப்படுத்தும் காப்பீடு நிறுவனங்களுக்கு, 12 சதவீதம் அபராதம் விதிப்ப தற்கும் வழிவகை செய்யப் பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை