உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்கு சந்தை நிலவரம் நீடிக்காத உற்சாகம்

பங்கு சந்தை நிலவரம் நீடிக்காத உற்சாகம்

நேற்று முன்தினத்தை போலவே, நேற்றும் இந்திய சந்தை குறியீடுகள் லேசான இறக்கத்துடன் நிறைவு செய்தன. உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் துவங்கின. இருப்பினும், ஒன்பது வர்த்தக நாட்களுக்கு பிறகு, அன்னிய முதலீடுகள் திரும்பியதால், உற்சாகம் அடைந்த முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால், சந்தை எழுச்சி பாதைக்கு திரும்பியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு குறித்த அறிவிப்பின் தாக்கத்தால், சிறிது நேரத்திலேயே மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டது. இதனால் சந்தை ஊசலாட்டத்துக்கு சென்றது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 1,881 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.65 சதவீதம் அதிகரித்து, 76.33 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 86.97 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ