உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்கு சந்தை நிலவரம் : நான்காவது நாளாக உயர்வு

பங்கு சந்தை நிலவரம் : நான்காவது நாளாக உயர்வு

நான்காவது நாளாக உயர்வு

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்றும், இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. அன்னிய முதலீடுகள் மீண்டும் வர துவங்கியதன் எதிரொலியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் தொடர்பான தாக்கம், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே நேரடி பேச்சு, கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்தது ஆகிய நேர்மறை காரணங்களால், வாகனத்துறை மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்கினர். இதனால், நேற்று நாள் முழுதும் சந்தை குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகமாகின. தொடர்ச்சியாக, நான்காவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவு செய்தன.

உலக சந்தைகள்

திங்களன்று அமெரிக்க சந்தைகள் மாற்றமின்றி முடிவடைந்தன. ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

உயர்வுக்கு காரணங்கள்

* ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் தொடர்பான தாக்கம் நீடித்தது * மீண்டும் அன்னிய முதலீடுகள் குவிய துவங்கி இருப்பது * முன்னணி பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் ___ கோடி ரூபாய்க்கு பங்குகளை ___ இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.93 சதவீதம் குறைந்து, 65.98 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 44 பைசா அதிகரித்து, 86.95 ரூபாயாக இருந்தது. நிப்டி: 24,980.65 மாற்றம்: 103.70 ஏற்றம் பச்சை சென்செக்ஸ்: 81,644.39 மாற்றம்: 370.64 ஏற்றம் பச்சை உயர்வு கண்ட பங்குகள் நிப்டி (%) டாடா மோட்டார்ஸ் 3.62 அதானி போர்ட்ஸ் 3.22 ரிலையன்ஸ் 2.84 சரிவு கண்ட பங்குகள் நிப்டி (%) டாக்டர் ரெட்டீஸ் 1.40 சிப்லா 1.15 ஹிண்டால்கோ 1.03


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ