சர்க்கரை உற்பத்தி 4சதவிகிதம் குறையும்
புதுடில்லி:நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 4.40 சதவீதம் குறையும் என்று அனைத்து இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:முந்தைய கணிப்பில் 296 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போதைய திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 283 லட்சம் டன்னாக குறையும். முந்தைய 2024- - 25ம் ஆண்டில் மொத்த சர்க்கரை உற்பத்தியான 262 லட்சம் டன்னைவிட இது கூடுதல். 32 லட்சம் டன் எத்தனால் தயாரிப்புக்காக திருப்பிவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.