உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவில் ரூ.68,000 கோடி முதலீடு செய்ய சுசூகி திட்டம் ஆண்டுக்கு 42 லட்சம் கார் விற்க இலக்கு

இந்தியாவில் ரூ.68,000 கோடி முதலீடு செய்ய சுசூகி திட்டம் ஆண்டுக்கு 42 லட்சம் கார் விற்க இலக்கு

புதுடில்லி:சுசூகி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் 2030 நிதியாண்டிற்குள், 68,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, உலக அளவில், 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவில் 60 சதவீதம் முதலீடு செய்ய உள்ளது. இதன் வாயிலாக, மூன்று மடங்கு அதிகமாக அதாவது ஆண்டுக்கு 42 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், கடந்த 1980ம் ஆண்டு முதல் தொடர்ந்து முதலீடு செய்து வரும் இந்நிறுவனம், தற்போது, இந்திய கார் சந்தையில், 40 சதவீத பங்கை வைத்துஉள்ளது. இதை 50 சதவீதமாக மாற்ற, கூடுதலாக எஸ்.யூ.வி., மற்றும் எம்.பி.வி., கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.குறிப்பாக, நடப்பாண்டில் இ - விட்டாரா மின்சார காரை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், 2030க்குள் மேலும், நான்கு மின்சார கார்களை அறிமுகப்படுத்த இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுதும், சார்ஜிங் கட்டமைப்பில் முதலீடு செய்ய இந்நிறுவனம் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ