உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அதிக ஏற்றுமதி தமிழகத்துக்கு மூன்றாம் இடம்

அதிக ஏற்றுமதி தமிழகத்துக்கு மூன்றாம் இடம்

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டில் அதிக ஏற்றுமதி செய்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. குஜராத் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக, இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பு மேலும் தெரிவித்ததாவது: கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 9.83 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை குஜராத் ஏற்றுமதி செய்துள்ளது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 26.60 சதவீதம். இது, முந்தைய நிதி ஆண்டை விட சற்று சரிவு. குஜராத்தின் மொத்த ஏற்றுமதியில் ஜாம்நகர், மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இடம்பெற்றது. இரண்டாம் இடத்தில் 5.57 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் மஹாராஷ்டிரா உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. கர்நாடகா, உத்திர பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ